[00:00.000] 作词 : Na. Muthukumar [00:00.000] 作曲 : Yuvan Shankar Raja [00:00.000] [01:42.888] [01:48.590]ஆராரோ பாட இங்கு தாயுமில்லை [01:55.450]உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை [02:02.040]நீ மண்ணில் வந்துதிக்க [02:04.330]உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை [02:08.880]விதி கண்ணை மூடிக்கொண்டு [02:11.150]தெருவில் எறிந்ததொரு வானவில்லை [02:15.566] [02:15.680]என் அன்பே என் அமுதே [02:19.181]இந்த காயம் ஆறிவிடும் தூங்கு [02:22.610]என் கண்ணே என் மணியே [02:25.940]உன்னை தன்னந்தனியாய் நீ தாங்கு [02:29.585] [02:29.811]ஆராரோ பாட இங்கு தாயுமில்லை [02:36.720]உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை [02:44.305] [02:44.606]·· இசை ·· [03:07.432] [03:07.630]கடவுளின் உருவம் எதுவென [03:10.380]மழலை சிரிப்பிலே அறிய வைக்கின்றாய் [03:14.290]சேற்றிலே வளர்ந்த தாமரை [03:17.260]மலரைப் போலவே நீ தோன்றினாய் [03:21.144] [03:21.340]பூமியிது புனிதமில்லை [03:24.790]ஆயிரம் அசுத்தங்கள் உள்ளது [03:28.020]தீயிலுமே நீந்தி வர [03:31.490]நீ இன்று கற்றுக்கொள் நல்லது [03:34.566] [03:34.690]இந்த உலகம் என்பது [03:36.850]இன்ப துன்பம் உள்ள பாதையடா [03:41.340]நீ முட்டிமோதி எழ [03:43.670]வழிகள் சொல்லித்தரும் கீதையடா [03:50.675] [03:52.100]ஆராரோ பாட இங்கு தாயுமில்லை [03:58.920]உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை [04:06.186] [04:12.660]நதியிலே விழுந்த இலையென [04:15.543]உனது பயணங்கள் தொடர்ந்து போகட்டும் [04:19.410]அலைவரும் அடுத்த திருப்பத்தில் [04:22.360]உனது கரை எதிரிலே தோன்றிடும் [04:26.296] [04:26.390]வேர் எங்கோ செடி எங்கோ [04:29.920]நீ இங்கே தனியாய் பூக்கிறாய் [04:33.130]வழி தவறி வீட்டில் வந்த [04:36.620]பறவையைப் போலவே பார்க்கிறாய் [04:39.666] [04:39.790]நீ கடவுள் எழுதி வைத்த [04:41.990]மண்ணில் வந்த ஒரு கவிதையடா [04:46.570]அதன் இடையில் இரு உயிர்கள் [04:48.770]செய்த எழுத்துப்பிழை பாவமடா [04:55.695] [04:57.100]ஆராரோ பாட இங்கு தாயுமில்லை [05:04.070]உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை [05:10.610]நீ மண்ணில் வந்துதிக்க [05:12.780]உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை [05:17.345]விதி கண்ணை மூடிக்கொண்டு [05:19.710]தெருவில் எறிந்ததொரு வானவில்லை [05:24.543]