|
அன்பே... |
|
அன்பே... |
|
பேரன்பே... |
|
பேரன்பே... |
|
ஏனோ இரவோடு ஒளியாய் கூடும் |
|
உறவொன்று கேட்கிறேன் |
|
வரைமீறும் இவளின் ஆசை |
|
நிறைவேற பார்க்கிறேன் |
|
நதி சேரும் கடலின் மீது |
|
மழை நீராய் சேருவேன் |
|
அமுதே பேரமுதே |
|
பெண்மனதின் கனவின் |
|
ஏக்கம் தீர்க்குமா |
|
ஈர்க்குமா |
|
மதியே நன் மதியே |
|
இவன் அழகின் பிம்பம் |
|
கண்கள் பார்க்குமா |
|
தோற்குமா |
|
மழைவானம் தூறும் போது |
|
மணல் என்ன கூசுமோ |
|
மலரோடு மலர்கள் கூட |
|
ஊர் என்ன தூற்றுமோ |
|
திரையே திரைக்கடலே |
|
உன் அதிரும் அன்பு |
|
மதிலை தாண்டுதே |
|
தூண்டுதே |
|
நெஞ்சோரம் தூங்கும் மோகம் |
|
கண்ணோரம் தூபம் போட |
|
சொல்லாத ரகசியம் நீதானே |
|
ஊர் கேட்க ஏங்குதே |
|
தனிமையில் துணைவரும் யோசனை |
|
நினைவில் மணக்குதுன் வாசனை |
|
எல்லாமே ஒன்றாக மாறுதே |
|
மணந்திட சேவல் கூவுதே |
|
கோடைக்காலத்தின் மேகங்கள் |
|
கார்காலம் தூறும் |
|
ஆளில்லாத காட்டிலும் |
|
பூபாளம் கேட்கும் |
|
அன்பே பேரன்பே |
|
நெடுவாழ்வின் நிழல்கள் |
|
வண்ணம் ஆகுதே... ஆகுதே... |
|
உறவே நம் உறவே |
|
ஒரு அணுவின் பிரிவில் |
|
அன்றில் ஆகுதே... ஆகுதே... |
|
உரையாத சொல்லின் பொருளை |
|
மொழி இங்கு தாங்குமோ |
|
உறவாக அன்பில் வாழ |
|
ஒரு ஆயுள் போதுமோ... |